(UTV|COLOMBO)-2562ம் ஸ்ரீ பௌத்த வருடத்திற்கான அரச வெசாக் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருநாகல் பிங்கிரிய தேவகிரி ரஜமஹாவிகாரையினை கேந்திரமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.
2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி முதல் மே மாதம் 02ம் திகதி வரையான ஒரு வார காலத்தினை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும், அதனுடன் தொடர்புபட்ட மேலும் பல நிகழ்ச்சிகளை செயற்படுத்துவதற்கும் உத்தேசித்துள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]