வகைப்படுத்தப்படாத

இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு பிரதமருக்கு அழைப்பில்லை

(UTV|COLOMBO)-பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் திருமணத்திற்கு அரசியல்வாதிகளை அழைக்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமது நாட்டு பிரதமர் தெரேசா மேவுக்கும்  அவர்கள் அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களின் திருமணத்திற்கு அழைப்பவர்களின் பெயர் பட்டியலில் அரசியல்வாதிகளின் பெயர்கள் இல்லை என்பதுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் அவர்கள் அழைப்பு விடுக்கவில்லை என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளவரசர் ஹரி மற்றும் மேகனின் நெருங்கிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்குமே அவர்களின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 19 ஆம் திகதி ஹரி மற்றும் மேகன் மார்க்கலினின் திருமணம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இண்டர் நெட் சேவை 4 மணி நேரம் முடக்கம்

நோட்டனில் ஆணின் சடலம் மீட்பு

சிறிகொத்த கட்சிக் காரியாலயத்திற்கு எதிராக உள்ள பாதை முடக்கம்