சூடான செய்திகள் 1

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல்வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையில் மழைவீழ்ச்சி பெய்யக்கூடும்.

குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, மேற்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலைவேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக காற்றும் வீசக்கூடும். இடிமின்னலின்போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சூரியனின் வடக்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்க உள்ளது. இன்று நண்பகல் 12.11அளவில் நொச்சியாகம, கலேன்பிந்துனுவௌ, மற்றும் சோமபுர ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சத்தில் காணப்படும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எல்பிட்டிய தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

editor

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]

´அபு இக்ரிமா´ கைது