வகைப்படுத்தப்படாத

டிரம்புடனான பேச்சுவார்த்தை பற்றி முதன்முதலாக மவுனம் கலைத்தார் கிம் ஜாங் அன்

(UTV|COLOMBO)-மெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே நடந்து வந்த வார்த்தை யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. அத்துடன் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய அளவுக்கு இணக்கமான சூழல் உருவாகி வருகிறது. இதில் தென்கொரியாவின் சமரச முயற்சிகள் வெற்றி அளித்து வருகின்றன.

டிரம்பும், கிம் ஜாங் அன்னும் மே மாதம் அல்லது ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பான முன் ஏற்பாடுகளை கவனிப்பதற்கு இரு நாட்டு உயர் அதிகாரிகளும் சந்தித்துப் பேசி உள்ளனர்.

கிம் ஜாங் அன்னுடன் பேச்சு நடத்தப்போவது குறித்து டிரம்ப் டுவிட்டரில் நேரடியாக தெரிவித்து விட்டார். ஆனால் கிம் ஜாங் அன் மட்டும் இந்த விஷயத்தில் நேரடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.

இந்த நிலையில் இப்போது அவர் தன் மவுனத்தை கலைத்துக்கொண்டு கருத்து வெளியிட்டு உள்ளார்.

நேற்று முன்தினம் பியாங்யாங் நகரில், கிம் ஜாங் அன் தனது கட்சியினருடன் நடத்திய ஆலோசனையின்போது, அமெரிக்காவுடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை குறித்து குறிப்பிட்டு விவாதித்து இருக்கிறார். இதை அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. உறுதி செய்து உள்ளது.

எனினும் டிரம்புடனான கிம் ஜாங் அன்னின் சந்திப்பு எங்கு, எந்த தேதியில் நடைபெறும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் தீ – [VIDEO]

டெங்கு நோயால் பாடசாலை சீருடையை மாற்ற தீர்மானம்

அமெரிக்காவில் தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு