சூடான செய்திகள் 1

மன்னார் பிரதேச சபையைக் கைப்பற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரலாறு படைத்தது.

(UTV|COLOMBO)-மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாகக் கைப்பற்றியது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளைப் பெற்று தலைவராகத்  தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கொன்சஸ் குலாஸ் 10 வாக்குகளைப்பெற்றுக்கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஜாஹிருக்கு ஆதரவாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த இஸ்ஸதீனும், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர். இந்த பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் 7 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்ஸதீன் 11 வாக்குகளைப் பெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தர்சீன்; 9 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ் முதன் முதலாக கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று(21) கையளிப்பு

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு