விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகல்

(UTV|INDIA)-ஐபிஎல் 11-வது சீசன் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இடம் பிடித்திருந்தார். தென்ஆப்பிரிக்கா தொடரின் 4-வது டெஸ்டின்போது கம்மின்ஸ் முதுகு எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டது.

இந்த காயம் வீரியம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து கம்மின்ஸ் விலகுகிறார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் சனிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கம்மின்ஸ் பங்கேற்கமாட்டார்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் தடைக்காரணமாக விளையாடவில்லை. மிட்செல் ஸ்டார்க் காயத்தால் விலகியுள்ளார். இந்நிலையில் பேட் கம்மின்ஸும் விலகியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இந்திய அணி ஜூலை 5ம் திகதி இலங்கைக்கு

இந்தியா – அவுஸ்திரேலியா கிரிக்கட் போட்டி ஒத்திவைப்பு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி