வளைகுடா

ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்

(UTV|SAUDI)-தற்போது சர்வதேச அளவில் சூரிய ஒளி மின் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் எண்ணெய் வளம் மிக்க நாடான அரேபியாவில் உலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி மின் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இங்கு ரூ.13 லட்சம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சவுதி அரேபியாவின் நிதி நிறுவனமும், ஜப்பானின் சாப்ட் டேங்க் குரூப் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து இதை உருவாக்குகின்றன. அதற்கான ஒப்பந்தம் நியூயார்க்கில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த ஆண்டில் ரூ.32 ஆயிரம் கோடி செலவில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்மூலம் 7.2 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.அது படிப்படியாக உயர்த்தப்பட்டு 2030-ம் ஆண்டில் 200 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். அப்போது அதன் முதலீடு ரூ.13 லட்சம் கோடியாக இருக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இது உலகில் தற்போதுள்ள சூரிய ஒளி மின் திட்டங்களை விட 100 மடங்கு பெரியது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரேசில் தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றம்

சவூதியில் துல்ஹஜ் மாத பிறை தென்பட்டது – ஞாயிறு பெருநாள்

சவுதியில் கார் ஓட்டிய பெண்களை ரோஜா கொடுத்து வரவேற்ற போலீசார்