(UTV|PAKISTAN)-பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம் இஸ்லாமாபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்தின் கட்டுமான பணிகள் 2007-ம் ஆண்டு தொடங்கப்ப்பட்டது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு விமானநிலையம் கட்டி முடிக்கப்பட்டது. சடார் மற்றும் ராவால்பிந்தி ஆகிய இரு நகரங்களை இணைத்து இந்த விமானநிலையம் அமைந்துள்ளது.
இந்நிலையில், விமானநிலையம் வருகின்ற 20-ம் தேதி பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஆண்டிற்கு 15 மில்லியன் பயணிகள் உபயோக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விரிவாக்கப்பணிகள் முடிவடைந்த பின் 25 மில்லியன் பயணிகள் பயன்படுத்தலாம்.
ஒய் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமானநிலையம் பாகிஸ்தானின் சர்வதேச விமானங்களில் மிகப்பெரியதாக இருக்கும். இதன் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெறுவர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]