(UTV|COLOMBO)-முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இம்மாத இறுதியில் இருந்து கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை கூறியுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் முச்சக்கர வண்டி சேவையின் தரத்தை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.
கட்டண மீட்டர் கடந்த 01ம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மேலும் இரண்டு வார காலம் வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமது சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கூறினார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]