வகைப்படுத்தப்படாத

சிரிய அரசு மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு அதிகாரம் உண்டு-அமெரிக்கா

(UTV|AMERICA)-ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியின்றி சிரிய அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு அதிகாரமுண்டு என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிரியா மீதான நச்சுவாயு தாக்குதல் குறித்து நேற்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ரஷ்யாவே ஆதரவு வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹெலி குற்றஞ்சுமத்தியுள்ளார்.

நச்சு வாயுத்தாக்குதலினால் கொல்லப்பட்ட சிறுவர்களின் நிழற்படங்களை கண்ணுற்றதாக கூறிய நிக்கி ஹெலி, இவ்வாறான கொலைச் சம்பங்களுக்கு சிரிய அரசுடன் ரஷ்யாவே கைக்கோர்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் சிரியாவில் இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான எவ்வித ஆதாரமும் இல்லையென ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் Sergei Lavrov தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Vote on no-confidence motion against Govt. today

கேரளாவில் நீடிக்கும் கன மழை

රජයට එරෙහි විශ්වාසභංගය වැඩි ඡන්දයෙන් පරාජයට පත්වෙයි