சூடான செய்திகள் 1

சீர்த்திருத்தப்பட்ட வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் புது வருடத்தின் பின்னர் அமுல்

(UTV|COLOMBO)-சீர்த்திருத்தப்பட்ட புதிய வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் அறவிடும் நடவடிக்கைகள் புதுவருடத்தின் பின்னர், அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட இதனை தெரிவித்தார்.

33 வீதி ஒழுங்கு விதிமீறல்கள் தொடர்பான அபராதம் சீர்த்திருத்தப்பட்டு புதிய அபராத விபரம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய அவற்றுள் 2 ஒழுங்கு விதி மீறல்களுக்கு முன்னதாக 25ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது 6 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் ரூபாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த முச்சக்கர வண்டிகளுக்காக மீட்டர் கருவி பொருத்துதல் மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 663 [UPDATE]

ஜனாதிபதி கொலை முயற்சி-வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது…

இன்றும் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை