சூடான செய்திகள் 1

அமைச்சு பதவியில் தொடர்வதா? இல்லையா? தீர்மானம் இன்று

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த, ஸ்ரீலங்கா சுத்திர கட்சியின் அமைச்சர்களுடன் இணைந்து தொடர்ந்தும் அரசாங்கத்தை நடத்த முடியாது என ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பில் கட்சியின் நிலைப்பாடு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அந்த விடயம் தொடர்பில் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும், கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர, வீரகெட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டார்.

அந்த கூட்டத்தின் பின்னர் அமைச்சு பதவிகளில் இருப்பதா இல்லையா என்பது குறித்து இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் புதிய நிர்வாகிகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்படுவர்.

எனவே எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து புதிய நிர்வாகிகளுடன் ஐக்கிய தேசிய கட்சி பயணிக்கும்.

அத்துடன் இளைஞர்களுக்கு கட்சியில் அதிக வாய்ப்புக்களை வழங்கவும் கட்சி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு [UPDATE[

கிளிநொச்சியில் தொடரும் கருணைமனு மற்றும் கையெழுத்து சேகரிப்பு

எரிபொருள் தடையின்றி கிடைக்கும் – மஹிந்த அமரவீர