(UTV|COLOMBO)-அரசாங்கத்தை பலப்படுத்த 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு…
அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இதேவேளை , தேர்தல் முறையில் குறைப்பாடுகள் இருக்குமாயின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்படவுள்ள மே மாதம் 7ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேபோல் , விரைவிலேயே முழு அமைச்சரவை மாற்றமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி , குறித்த செயற்பாடுகளுக்காக இரு தரப்பு குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]