(UTV|COLOMBO)-அவநம்பிக்கை பிரேரணையின் மூலம் துரோகிகள் தோற்கடிக்கப்பட்டாலும், பிரதமருக்கு கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம் இதுவாகும் என்று, ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான அவநம்பிக்கை தோற்கடிக்கப்பட்டமை தொடர்பாக அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரதமருக்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் இரண்டு வருட காலத்தில் மக்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் அடுத்த தேர்தலை மிகவும் மன உறுதியுடன் சந்திக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக எதிர்கட்சிகளால் இந்த நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு போடப்பட்ட நாடகம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை இன்னும் ஒரு தொலைக்காட்சி தொடரைப் போலவே மக்கள் பார்த்திருக்கின்றார்கள்.
இதனால் காலம் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பிரதமர் நிலையான ஒரு அரசாங்கத்தை எற்படுத்தி மக்களுக்கான செயல் திட்டங்களை அமுல்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]