(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது பேசப்பட்டுள்ளது.
இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவிடம் அத தெரண வினவிய போது, எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்கு தான் உள்ளிட்ட குழு தயார் என்று கூறினார்.
இதுதவிர நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஏற்கனவே கையொப்பமிட்ட போதிலும் நேற்றைய வாக்களிப்பில் கலந்து கொள்ளாத பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிடம் அத தெரண வினவியதற்கு, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடுவதை தவிர்க்கும் நோக்கில் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்று கூறினார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]