விளையாட்டு

21ஆவது பொதுநலவாய விளையாட்டு – முதல் தினப் போட்டிகளில் களமிறங்கும் இலங்கையர்கள்

(UTV|COLOMBO)-21வது பொதுநலவாய விளையாட்டு போட்டியில் 48 கிலோகிறாம் பளுதூக்கும் பெண்கள் பிரிவில் தினுஷா மற்றும் 56 கிலோகிறாம் பளுதூக்கும் ஆண்கள் பிரிவில் சத்துரங்க லக்மால் ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளனர்.

21வது பொதுநலவாய விளையாட்டு போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று அவுஸ்திரேலியாவின் கோல்ட்-கோஸ்ட் நகரில் இடம்பெற்றது.

இந்த விளையாட்டு விழாவின் முதல் தினத்திற்குரிய விளையாட்டுப் போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதில் பட்மின்ட்டன், ஜிம்னாஸ்டிக், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட ஆறு போட்டிகளில் இலங்கை போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

விழாவின் ஆரம்பத்தில்; அடை மழை பெய்தாலும், அது விளையாட்டின் உயிரோட்டத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுநலவாய விளையாட்டு விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும்.

இதில் 71 நாடுகளையும், பிராந்தியங்களையும் சேர்ந்த 4 500ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். இவர்கள் 275 தங்கப்பதக்கங்களுக்காக போட்டியிடவுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை மிக விரைவில்-பைசர் முஸ்தபா

சுதந்திர கிண்ண டி20 : ஷெஹான் மதுசங்க விளையாட மாட்டார்

நான் மனிதனாக மாறியதற்கு காரணம் அவரே