சூடான செய்திகள் 1

கடந்த 03 மாதங்களில் 720 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO)-கடந்த மூன்று மாத காலத்தில் சமூக ஊடகங்கள் சம்பந்தமாக 720 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு கூறியுள்ளது.

அந்த முறைப்பாடுகளில் அதிகமானவை பேஸ்புக் சம்பந்தமாக கிடைத்திருப்பதாக அந்த பிரிவின் ஊடகப் பேச்சாளர் பாதுகாப்பு பொறியிலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறினார்.

அந்த முறைப்பாடுகளில் நூற்றுக்கு 75 வீதமானவை போலிக் கணக்குகளை இயக்கிச் செல்வது தொடர்பானவை என்று கணினி அவசர நடவடிக்கை பிரிவு கூறியுள்ளது.

டுவிட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் சம்பந்தமாகவும் கடந்த மூன்று மாத காலத்தில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அந்த முறைப்பாடுகள் சம்பந்தமாக தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று விலக்கிக்கொள்ளப்பட்டது…

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு