வகைப்படுத்தப்படாத

கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களுக்கு டிரம்ப் இரங்கல்

(UTV|AMERICA)-அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் ஒன்று கலிபோர்னியா மாகாணத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத நிலையில் எல் சாண்ட்ரோ அருகேயுள்ள பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணித்த 4 கடற்படை வீரர்களும் உயிரிழந்தனர்.

அமெரிக்க பாதுகாப்பு படையில் உள்ள மிக நீளமான, அதிக எடை சுமக்கக்கூடிய ஹெலிகாப்டரான இது ‘சிஎச்-இ சூப்பர் ஸ்டாலியன்’ ரகத்தை சேர்ந்தது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 4 வீரர்கள் பலியானதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறுகையில், அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரஷியாவில் 71 பேரை பலிகொண்ட விமான விபத்து குறித்து விசாரணை தீவிரம்

வௌ்ள நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்பட்ட மாணவன் பலி!

மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்