வகைப்படுத்தப்படாத

நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

வாக்களிப்புகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் பெறப்பட்டது.

இந்த வாக்களிப்பில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, சரத் அமுனுகம, நிமல் சிறிபால டி சில்வா, பைஸர் முஸ்தபா, மஹிந்த சமரசிங்க, விஜேமுனி சொய்சா, லக்ஸ்மன் செனவிரத்ன, ஏ.எச்.எம் பௌசி, லசந்த அலகியவன்ன, நிஷாந்த முத்துஹெட்டிகம, மனுஷ நாணயக்கார, தொண்டமான், அத்துரலிய ரத்ண தேரர் உட்பட 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ மற்றும் ஈபிடீபி தலைவர் டக்லஸ் தேவானந்த ஆகியயோர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் நேற்று  காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்களிப்புகள் இரவு 9.30 மணிக்கு ஆரம்பிக்கபட்டு   நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார்

இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய இளைஞர் கைது

அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி