சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, அரசியல் நிகழ்ச்சிரலுக்கு அமைய கொண்டுவரப்பட்டுள்ளதென்றும் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவாதத்தில் மேலும் உரையாற்றிய அவர்,

மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்காகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளார்கள். ஏன் இந்த சந்தர்ப்பத்தில் அந்தக்காரணத்திற்காக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார்கள்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ள காலத்தைப் பார்க்கும் போது, அதன் பின்புலம் அரசியல் நிகழ்ச்சி நிகழ்ச்சிரலுக்கு அமைய இருப்பதை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் பொருளாதார மையமாக எம்மால் மாறமுடியும், எனினும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளோம் என அவர் தனதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனினும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணயில் நம்பிக்கையான காரணங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஐ.தே.க உறுப்பினர்கள் 26 பேர் ஒன்றிணைந்து தீர்மானம்

பலத்த சூறாவளி வீசக்கூடும்

ஜனாதிபதி சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை