சூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கிளிநொச்சி விஜயம்

(UTV|KILINOCHCHI)-முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க செயலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமரத்துங்க இன்று(03) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

தேசிய நல்லிணக்க செயலகத்தின் நிதி உதவியின்   கீழ்  மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளையே அவர் ஆரம்பித்துள்ளார்
 இன்று காலை பளை பிரதேசத்தில் பளை இந்து ஆரம்ப பாடசாலை ஒன்றின் வகுப்பறை கட்டிடத்தினை திறந்து வைத்து பின்னர்  கிளிநொச்சி கரைச்சி  பிரதேசத்தில் கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு ஜந்து மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட உணவு பதனிடல் நிலையத்தையும் திறந்து வைத்துள்ளதோடு, வடக்கச்சி மற்றும் முழங்காவில்  பிரதேசத்தில் தேசிய நல்லிணக்கத்தின் செயலகத்தின்  நிதியுதவியில் அமைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களையும்  மக்களின் பாவணைக்கு திறந்து வைத்துள்ளார்.
எஸ்.என்.நிபோஜன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகார சபை

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு

இலாபமீட்டுவதை விட மக்களுக்கு சேவையாற்றுவதை முதன்மை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்