(UTV|COLOMBO)-தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குமிடையில் இடம்பெற்ற கடும் போட்டிக்கிடையில் கரவெட்டி பிரதேச சபையை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
31 உறுப்பினர்களை கொண்ட கரவெட்டி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 9 உறுப்பினர்களையும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 7 உறுப்பினர்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும், தமிழர் விடுதலை கூட்டணி 3 உறுப்பினர்களையும், ஈ.பி.டி.பி 3 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சி 2 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாவது கூட்டம் இன்றுகாலை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தங்கவேலாயுதம் ஐங்கரன், தவிசாளர் போட்டிக்கு பிரேரிக்கப்பட்டதுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் சதாசிவம் இராமநாதன் பிரேரிக்கப்பட்டார். இவ்விருவருக்கிடையில் பகிரங்கமாக வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பிரேரிக்கப்பட்ட த.ஐங்கரன் 11 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பனர் ச.இராமநாதன் பத்து வாக்குகளை பெற்றார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
அதைத்தொடர்ந்து இடம்பெற்ற உப தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பிரேரிக்கப்பட்ட கந்தர் பொன்னையா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]