சூடான செய்திகள் 1

பிரபல பாதாள குழு உறுப்பினர் சீட்டி சிக்கினார்

(UTV|COLOMBO)-பிரபல பாதாள உலக குழுத்தலைவரான அங்கொட லொக்காவிற்கு மிகவும் நெருக்கமான சந்தேகநபரான எலவலகே சரத்குமார எனப்படும் சீட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் உள்ள அவரின் வீட்டில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்த கைக்குண்டு ஒன்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் தற்போது பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதுடன், அதன் பின்னர் அவர் திட்டமிட்ட குற்றச் செயல் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

IMF பிரதிநிதிகளை சந்திக்கின்றோம்- சஜித் அறிவிப்பு

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் இன்றிலிருந்து ஆரம்பம்