விளையாட்டு

எம்.பி. பதவி சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கிய சச்சின்

(UTV|INDIA)-கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் ஓய்வுக்கு பிறகு 2012-ம் ஆண்டு டெல்லி மேல்சபை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.

டெல்லி மேல்சபை எம்.பி. என்ற முறையில் டெண்டுல்கருக்கு கடந்த 6 ஆண்டுகளில் ஊதியம் மற்றும் மாதப்படிகள் அனைத்தையும் சேர்த்து சுமார் ரூ.90 லட்சம் கிடைத்துள்ளது.

இந்த தொகை முழுவதையும் அவர் பிரதமர் நிவாரண நிதிக்கு அப்படியே வழங்கியுள்ளார்.

இதற்காக டெண்டுல்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “டெண்டுல்கரின் இந்த நற்செயலுக்கு பிரதமர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவ இந்த தொகை பயன்படுத்தப்படும்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டுல்கர் தனது பதவி காலத்தில் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பெரும்பாலான நேரங்களில் கலந்து கொள்ளவில்லை என்ற புகார் இருந்து வந்தது.

தெண்டுல்கர் ஏற்கனவே எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.4 கோடி தொகையை பெற்று பல்வேறு திட்டங்களுக்கு வழங்கியுள்ளார். 2 கிராமங்களையும் அவர் தத்தெடுத்து இருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

LPL போட்டித் தொடரின் அட்டவணை

உலக பெட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டிக்கான திகதியில் மாற்றம்

மெல்போர்ன் கிரிக்கெட் கழகத்தின் அடுத்த தலைவர்