வகைப்படுத்தப்படாத

தென்கொரிய பாப் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்த கிம் ஜாங்-உன்

(UTV|NORTH)-அணு ஆயுத பிரச்சினை, ஏவுகணைகள் சோதனை காரணமாக வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. இதனால் கொரிய தீப கற்பகத்தில் போர் பதட்டம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா பங்கேற்றது. அதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் தணிந்தது. தென் கொரிய அதிகாரிகள் வடகொரியா சென்று அதிபர் கிம் ஜாங்-யங்கை சந்தித்தனர். அதன் எதிரொலியாக இரு நாடுகளுக்கு இடையே உறவு மலர தொடங்கியுள்ளது.

சமீபத்தில் தென் கொரியாவின் பாப் இசைக் கலைக் குழுவினர் 120 பேர் வட கொரியா சென்றுள்ளனர். அங்கு பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர். நேற்று தலைநகர் பியாங்யாங்கில் இசை நிகழ்ச்சி நடந்தது.

அதில் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தனது மனைவியுடன் சென்று கண்டு ரசித்தார். அப்போது இசை மற்றும் நடன நிகழ்ச்சியை பார்த்து இருவரும் கை தட்டி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் கிம் ஜாங்-உன் தென் கொரிய கலைஞர்களை நேரில் சந்தித்து பாராட்டினார். கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். கிம்ஜாங்-உன் வடகொரிய அதிபராக பதவி ஏற்று 10 ஆண்டுகள் ஆகிறது.

தற்போது தான் முதன் முறையாக தென் கொரிய கலை நிகழ்ச்சியை நேரில் சென்று பார்த்து இருக்கிறார். நல்லெண்ண அடிப்படையில் வட கொரிய கலைஞர்கள் தென் கொரிய தலைநகர் சியோல் சென்று நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

அமெரிக்காவுக்கு ஹூவாய் சிஇஓ வின் பதிலடி…

නුවන් කුළසේකර ජාත්‍යන්තර ක්‍රිකට් පිටියට සමුදෙයි

நாட்டின் அனைத்து மக்களின் உரிமைக்காவும் முன்நிற்பேன் – ஜனாதிபதி