சூடான செய்திகள் 1

குளியாப்பிட்டிய பிரதேச சபையை மொட்டும், மயிலும் இணைந்து கைப்பற்றியது

(UTV|KURUNEGALA)-குருநாகல் மாவட்ட குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் (மொட்டு), அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றிக்கொண்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த (மொட்டு) விஜயசிறி ஏக்கநாயக்க 21 வக்குகளைப் பெற்று தவிசாளராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எம்.சி.இர்பான் எதுவித போட்டியுமின்றி, ஏகமனதாகப் பிரதித் தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தவிசாளரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த புஷ்ப குமார 16 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

குளியாப்பிட்டிய பிரதேச சபையில் 03 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், 02 உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியும், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த மனோஜ் என்பவரும் வாக்களிப்பில் பங்கேற்காது நடுநிலை வகித்தனர்.

பிரதித் தவிசாளர் தெரிவின்போது, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஏ.எஸ்.எம்.சாஜஹான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சந்தன புஷ்பகுமாரவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் இர்பானுக்கு எதிராக போட்டியில் கலந்துகொள்ள பிரேரித்த போதும், சந்தன புஷ்பகுமார அதனை நிராகரித்து போட்டியிலிருந்து விலகினார்.

குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள, பொதுஜன பெரமுனவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தலா 20 மற்றும் 02 ஆசனங்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம்

சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ரிஷாத்தின் வாழ்த்து…

இன்று(12) நீதிமன்றில் முன்னிலையாகும் ரவி கருணாநாயக்கவின் மகள்