சூடான செய்திகள் 1

சித்தியடைந்தவர்களின் வீதம் உயர்வு

(UTV|COLOMBO)-2017 ஆண்டின் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு 69.94% ஆக இருந்த உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்களின் வீதம் இம்முறை 73.05% வரையில் 3.11% ஆல் உயர்வடைந்துள்ளது.

2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிதப் பாடத்தின் சித்தி வீதமும் 4.43% ஆல் அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு 62.81 ஆக இருந்த கணிதப் பாடத்தின் சித்தி வீதம் இம்முறை 67.24% ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்து 9A எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2016 ஆண்டு 8224 ஆக இருந்த 9A எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை 9960 ஆக அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கிராமியப் புரட்சி வேலைத்திட்டம் இரத்து

மாளிகாவத்தையில் போக்குவரத்து மட்டுபடுத்தல்

எஸ்.பீ.நாவின்ன சஜித்திற்கு ஆதரவு