சூடான செய்திகள் 1

ஜனாதிபதியை சந்தித்த ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்..! உறுதியளித்த ஜனாதிபதி!

(UTV|COLOMBO)-தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை கோரும் விடயத்தில் தமிழ் இளைஞர் அமைப்பு  ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளுடன் இன்று காலை  ஜனாதிபதியை ஜனாதிபதி செயலாளர் செயலகத்தில் சந்தித்து ஆனந்த சுதாகரின் விடுதலையினை வலியுறுத்தி மனு ஒன்றினை கையளித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழ் அரசியல்வாதிகள் எவரும் குரல் குடுக்காத நிலையில் ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக இந்த  தமிழ்  இளைஞர் அமைப்பு மும்முரமாக செயற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும் மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி மனுவை பெற்றுக்கொண்டு ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதற்குரிய ஏற்பாடுகளை  முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் எமது இணைய செய்திப்பிரிவு ஜனாதிபதி ஊடக பிரிவை தொடர்பு கொண்டு வினவியது.

எவ்வாறாயினும் , அவ்வாறான உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை ஊடகங்களுக்கு விடுக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரஷ்யாவில் பதற்றம் – நடுக்கத்தில் புட்டின்

ஐ.தே.முன்னணியின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று பிற்பகல்

150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றல்