(UTV|COLOMBO)-பால் மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த சபையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அதன்படி , பால் மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் தொடர்ந்து ஆராய நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்மா விலையை 80 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு கடந்த தினத்தில் அனுமதி வழங்கியிருந்தது.
இவ்வாறு பால் மா விலை அதிகரிக்கப்பட்டால் 400 கிராம் பால் மா பெக்கட் ஒன்றின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]