சூடான செய்திகள் 1

01ம் திகதி முதல் மக்கள் மீது பல புதிய வரிச்சுமைகள்

(UTV|COLOMBO)-ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் இதுவரை காலமும் இல்லாத வகையில் பல்வேறு துறைகளுகளுக்கும் வரி அறிவடப்படும் புதிய ஆண்டு உதயமாகும் என்று கூட்டு எதிரக்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

ஏப்ரல் மாதம் 01ம் திகதியில் இருந்து காணி ஒன்றின் உரிமை மாற்றம் செய்யும் போது அல்லது மற்றொருவருக்கு விற்பனை செய்யும் போது 10 % வரி செலுத்த வேண்டும்.

அதேபோல் மாடி வீடுகளை கொள்வனவு செய்யும் போது நூற்றுக்கு 15% வெட் வரி செலுத்த வேண்டும். இதுபோன்ற பல வரிகளை ஏப்ரல் 01ம் திகதியிலிருந்து செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் சித்திரைப் புத்தாண்டு நிறைவடைந்த உடனேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் பெற்றோல் விலையை அதிகரிக்கும் என்றும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

2019ம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டம் (நேரடி)

மன்னாரில் கைவிடப்பட்ட நிலையில் கேரளக் கஞ்சாப்பொதிகள் மீட்பு

ஹேமசிறி இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை