சூடான செய்திகள் 1

சிறந்த துறைமுக தரப்படுத்தலில் கொழும்புத் துறைமுகம் முன்னேற்றம்

(UTV|COLOMBO)-உலகின் சிறந்த தொடர்புகளைக் கொண்ட துறைமுகங்களை தரப்படுத்தும் வரிசையில் கொழும்புத் துறைமுகம் 13 ஆவது இடத்திற்கு தெரிவாகியுள்ளது.

ட்வ்ரி குளோபல் கென்ரயினர் துறைமுகம் தொடர்பான சுட்டெண் (Drewry Global Container Port Connectivity Index) மதிப்பீட்டிற்கு அமைவாக கொழும்பு துறைமுகம் உலகின் சிறந்த தொடர்புகளைக் கொண்ட 20 துறைமுகங்களில் 13 ஆவது இடத்திற்கு தெரிவாகியுள்ளது.

கடந்த காலங்களில் 18 ஆவது இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம் கடந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் இவ்வாறு 5 துறைமுகங்களை பின்தள்ளி, முன்னேற்றமடைந்துள்ளது.

இம்முறை இந்தப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்த ஜேபேல் அலி மற்றும் அல் ஜெசீரா ஆகிய துறைமுகங்களும் இடம்பெற்றுள்ளன.

துறைமுக மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் உலகின் கொள்கலனைக் கையாளும் துறைமுகங்கள், மற்றும் அவை தொடர்பில் குறிப்பிட்ட இலக்கை அடையும் துறைமுகங்கள் குறித்து இந்த துறைமுக புள்ளிவிபரம் கணிப்பீடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதியும் அமைச்சர்களும் தான் அதிகம் ஏச்சுப் பேச்சுக்களுக்கு உள்ளாகின்றனர்-அமைச்சரவையில் சீறிய ஜனாதிபதி

21 வயதில் பட்டதாரி, 25 வயதில் கலாநிதி-கல்வி அமைச்சர்

தலவாக்கலை நுவரெலிய பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு