சூடான செய்திகள் 1

டிரக்டர் வண்டி குடைசாய்ந்ததில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-கொரகதுவ – நெலுவ வீதியில் மீகஹதென்ன பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டிரக்டர் வண்டி ஒன்று கட்டுப்பட்டை இழந்து குடைசாய்ந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த டிரக்டர் வண்டியின் ஓட்டுனர் உட்பட நால்வரை மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான இருவரை மேலதிக சிகிச்சைகளுக்காக களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீகஹதென்ன பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மீகஹதென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

டுபாயிலிருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்தனர்

விசேட கட்டளையிடும் அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமனம்