விளையாட்டு

பங்களாதேஷ் கடற்படைக்கப்பல் ‘பிஎன்எஸ் பங்கபந்து’ நாடு திரும்பியது

(UTV|COLOMBO)-பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான ‘பிஎன்எஸ் பங்கபந்து’ கடற்படை கப்பல் இலங்கைக்கான நல்லெண்ண விஜயத்தை நிறைவுசெய்து நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

கடற்படை மரபுகளுக்கு அமைவாக கடற்படையினர் கப்பலை நேற்று வழியனுப்பி வைத்தனர்.

 

கொழும்பு துறைமுகத்தை கடந்த 22ஆம் திகதி வந்தடைந்த இக்கடற்படைக் கப்பல் சிப்பாய்கள் இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

 

233 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ள 103.7 மீட்டர் நீளமான ‘பிஎன்எஸ் பங்கபந்து’ கப்பலானது 2407 தொன்கள் எடையினை கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பாகிஸ்தானை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதலாவது இலங்கைத் தமிழர் தர்ஷன் செல்வராஜா

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் நீல் வக்னர் முன்னேற்றம்