வகைப்படுத்தப்படாத

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

(UTV|RUSSIA)-ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தின் கெம்ரோவோ நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் நேற்று திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், மேலும், 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் முதல் கட்டமாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், சுமார் 12 மணி நேரம் வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அருகிலுள்ள் கட்டிடங்களிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

(மாலைமலர்)

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 13 கிலோ தங்கம் தமிழகத்தில் சிக்கியது

யாழ் கடலில் மிதக்கும் வீடு

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துபவரா நீங்கள்..? காத்திருக்கிறது அதிர்ச்சி