சூடான செய்திகள் 1

உலக நீர் தினம் 2018

(UTV|COLOMBO)-நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் நீர் இன்றி அவதிப்படுகிறார்கள்.ஆனால் உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்.

பிரேஸிலின் றியோ டி ஜெனிரோ நகரில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுசுழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத் தொடரில் உலக நீர் தினத்தை அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய,ஆண்டுத் தோறும் மார்ச் மாதம் 22ஆம் திகதி உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும்.

தண்ணீர் குடிக்காமல் உங்களால் எத்தனை நாட்கள் அதிகப்பட்சமாக வாழ்ந்திட வாழ முடியும்?. ஒரு வாரம் கூட என வைத்துக்கொள்வோம். ஆனால் அதற்கு மேல் நம்மால் வாழ முடியாது. எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமை.

மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும் மேலும் பல விடயங்களுக்காகவும் இன்று உலக நாடுகளில் யுத்தம் இடம்பெறுகிறது.

ஆனால் எதிர்காலத்தில் யுத்தம் ஒன்று வருமாயின் அது நீருக்காக தான் இருக்கும்.
நீரை சேமித்து எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்போம்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கொரோனா வைரஸ் – இத்தாலியில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

இடியுடன் கூடிய மழை

அரசின் புதிய பேச்சாளர்களாக மஹிந்த மற்றும் கெஹலிய நியமிப்பு…