உலகம்

6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மீண்டும் திறப்பு

(UTV | இந்தியா) – உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தினமும் அதிகபட்சமாக 5 ஆயிரம் பேரை தாஜ்மகாலுக்குள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக அவர்களை பிரித்து இடைவெளி விட்டு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தியாவின் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது.

தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. முதல் நாளான இன்று ஏராளமானோர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இணையதள மூலமாக தைவான் நாட்டைச் சேர்ந்த 160 பேர் இன்று தாஜ்மஹாலை சுற்றி பார்க்க முன் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியுடன் பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வியட்நாமில் கனமழையால் – 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு கொரோனா

சீனா தடுப்பூசியினை இம்ரான் கானும் செலுத்திக் கொண்டார்