சூடான செய்திகள் 1

ஆணொருவருடன் 6 பெண்கள் இணைந்து செய்த காரியம்…

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு – மாவட்ட செயலகத்தில் உள்ள சமுர்த்தி அலுவலகத்தின் நிதியில் 57 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச வங்கியொன்றில் வைப்பிடப்பட்டிருந்த சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியை, சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் மற்றும் கணக்காளரின் போலி கையெழுத்து இடப்பட்ட காசோலை ஒன்றை சமர்ப்பித்து, சமுர்த்தி அலுவலர் ஒருவரால் இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிதியில் 36 லட்சம் ரூபாய் மட்டக்களப்பு புல்லுமலை பகுதியைச் சேர்ந்த சிலரது வங்கிக் கணக்குகளின் ஊடாக பரிமாற்றப்பட்டு, மோசடி இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சமுர்த்தி அலுவலரும் அவருக்கு உதவிய ஆறு பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைதாகியுள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

மேல் மாகாண தேர்தல் நடவடிக்கைக்கு பொறுப்பாக பிரதி பொலிஸ்மா மா அதிபர் நியமனம்