சூடான செய்திகள் 1

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

(UTV|BATTICALOA)-மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்ணபுரம் 35 ஆம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

31 வயதுடைய ஒருவரே இன்று அதிகாலை வயலில் கட்டப்பட்டிருந்த மின்சாரம் இணைக்கப்பட்ட கம்பியில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தமது கால்நடைகளை மேய்த்து வருவதற்காக இரண்டு பேர் 32ஆம் கிராமப் பகுதிக்கு, சென்றபோது அங்குள்ள வயல் பகுதியில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பியில் சிக்குண்டுள்ளார்.

குறித்த பகுதி மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட போதிலும் அதில் விவசாய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பன்றிகளில் ஊடுருவலை தடுப்பதற்காக கீழ் பகுதியில் இந்த மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகள் இழுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் விசாரரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருக்கின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரணிலை நேரில் சந்தித்து, இறுதி தீர்வு கட்டப்போகும் சம்மந்தன்!

இன்றிலுருந்து காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

மொட்டு கட்சியை ரணில் திறமையாக பிளபுபடுத்துகின்றார்!