சூடான செய்திகள் 1

உலக நீர் தினத்தை முன்னிட்டு குடிநீர் பவுசர்கள் விநியோகம்

(UTV|COLOMBO)-உலக நீர்தினத்தை முன்னிட்டு மாத்தறை, மொனராகலை மற்றும் கிழக்கு பிரதேசத்திற்கான குடிநீர் பவுசர் விநியோகிக்கும் நிகழ்வு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நடைபெற்றது.

நீர்வழங்கல் அமைச்சில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் வழங்கப்பட்ட நீர் பவுசர்கள் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் ஒருங்கிணைப்பு சேவை மத்திய நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சகலருக்கும் பாதுகாப்பான தூய குடிநீரை வழங்கும் நோக்கில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் குடிநீரில் கடல் நீர் கலந்துள்ள பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கப்பெறாத பகுதிகளுக்கும் குடிநீர் பவுசர்களை பெற்றுக்கொடுப்பதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கமைவாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் பவுசர் வழங்கும் கருத்திட்டத்திற்காக 235 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

முன்னர் குருநாகல், புத்தளம், அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை, பதுளை, ஹம்மாந்தோட்டை, பொலன்னறுவை, காலி மற்றும் கொழும்பு முதலான மாவட்டங்களுக்கான குடிநீர் பவுசர்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சிறுத்தையை கொலை செய்த நால்வருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு இழப்பீடு

தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்