சூடான செய்திகள் 1

நுவரெலிய நகர் மட்டத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்சக்கட்ட நடவடிக்கை

(UTV|NUWARA ELIYA)-நுவரெலிய நகர் மட்டத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்ச அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நுவரெலிய மாநகர சபை ஆணையாளர் கே.எம்.டபிள்யு.பண்டார தெரிவித்துள்ளார்.

நீரை சுத்திகரிப்பதற்கு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நகருக்கு விநியோகிக்கப்படும் நீரை சேமித்து வைத்து அவற்றை சுத்திகரித்து குடிநீர் பாவனைக்கு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

முன்னதாக இந்த விடயம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது. இதனால் நுவரெலியா நகரவாழ் மக்கள் குடிநீர் பாவனையில் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இவற்றைக் கருத்திற்கொண்டு நுவரெலியா நகர்வாழ் மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்த பிரதேசத்தில் ஏற்கனவே இருந்த சுத்திகரிப்பு பொறிமுறை மிகவும் பழமை வாய்ந்தது. இதனால் பல பிரச்சினைகள் எழுந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் திறந்துவைப்பு

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தில்…

சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவைப் பேணுவதற்கு பாலமாகச் செயற்பட்ட அலவியின் மறைவு கவலை தருகிறது-ரிஷாட்