வகைப்படுத்தப்படாத

சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம்

(UTV|INDIA)-சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் ம. நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

தனது 74 ஆவது வயதில் அவர் இவ்வாறு காலமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலா தற்காலிக விடுப்பில் வருவதாக அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் நடராஜன்.

பின்னர் அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 1975-ம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார்.

இத்திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

பின் 1980களில் ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பின்புலமாக, ஒருகட்டத்தில் ஆலோசகராகவும் இருந்து வந்தார் நடராஜன்.

அண்மையில் அவருக்கு உடநலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் கடந்த 16 ஆம் திகதி தீவிர சிகிச்சைக்காக நடராஜன் அனுமதிக்கப்பட்டடிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் உள்ள அவரது மனைவி சசிகலா  தற்காலிக விடுப்பில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

Related posts

களனிவௌி தொடரூந்து வீதிக்கு நாளை முதல் பூட்டு

Highest rainfall reported in Dunkeld estate

Another suspect surrenders over attack on van driver in Kalagedihena