சூடான செய்திகள் 1

விவசாயி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

(UTV|COLOMBO)-ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகல்ல மெதகம பிரதேசத்திலுள்ள விவசாய நிலமொன்றில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி ஒருவரின் சடலம்  இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 71 வயதுடைய கே.பீ.டிம். டிக்கிரி பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தாம் விவசாயம் செய்யும் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஊவா பரணகம – வெவேகம பகுதியை சேர்ந்த குறித்த விவசாயி கொலை குற்றவாளியாக 08 வருட காலம் சிறையில் இருந்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மரண விசாரணையும், பிரேத பரிசோதனையும் முடிந்தபின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மத்தள விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் அசோக் அபேசிங்க

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள்

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!