வகைப்படுத்தப்படாத

பல்கலைகழக மேம்பாலம் இடிந்து வீழ்ந்த விபத்தில் நால்வர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவின் புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அருகில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட மியாமி நகரில், புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அமைந்துள்ளது.

இந்த பல்கலைகழகத்தை ஒட்டி ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் இந்த வீதியை கடப்பது கடினமாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை வழியே புளோரிடா பல்கலைகழகம் மற்றும் எதிரேயுள்ள மாணவர்கள் விடுதியை இணைக்கும் 174 அடி நீள மேம்பாலம் அண்மையில் திறக்கப்பட்டது.

இந்நிலையில் மேம்பாலம் திடீரென இடிந்து வீதியின் குறுக்கே விழுந்தது.

இதில், அப்போது வீதியில் பயணித்த சுமார் 8 வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கின.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கிய வாகனங்களின் உள்ளே இருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலம் இடிந்ததையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை இடம்பெற்று வருகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

டப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்

கூகுள்’ நிறுவனத்துக்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் அபராதம்

Tamil MPs to meet the president today