வகைப்படுத்தப்படாத

உணவில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலப்பதன் மூலம் கருத்தரிப்பதைத் தடுக்க முடியும் என்ற பிரசாரம் உண்மைக்குப்புறம்பானது

(UTV|COLOMBO)-உணவில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலப்பதன் மூலம் கருத்தரிப்பதைத் தடுக்க முடியும் என்று முன்னெடுக்கப்படும் பிரசாரம் உண்மைக்குப்புறம்பானது என இலங்கையின் சிரேஷ்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விஞ்ஞான ரீதியில் இந்தக் கூற்று எந்த விதத்திலும் அடிப்படையற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

 

இலங்கை வைத்தியர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது இலங்கையின் 134 சிரேஷ்ட மருத்துவ நிபுணர்களின் கையொப்பத்தில் வெளியான அறிக்கை இங்கு வெளிடப்பட்டது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஓளடத மாத்திரைகள் மூலம் மலட்டுத்தன்மையை அல்லது கருவளத்தை தடுக்க முடியுமா?

 

அது பற்றி உண்மை நிலையை தெளிவுப்படுத்துவது எமது கடமையாகும் என நாம் எண்ணுகின்றோம்.

 

இது விஞ்ஞான ரீதியில் எந்தவித அடிப்படையும் இல்லாத பொய்யான கூற்று என்பதை நாம் பொறுப்புடன் கூறுகின்றோம்.

 

ஓளடத மாத்திரைகள் தூள்கள் அல்லது தடுப்பூசிகள் மூலமோ ஒரு குடும்பத்தையோ அல்லது இனத்தையோ மலட்டுத்தன்மையாக்க முடியும் என்பது நடைமுறையில் எவ்வகையிலும் செய்ய முடியாதது என்பதை வலியுறுத்திக் கூறுகின்றோம்.

 

ஆண் பெண் இருபாலருக்கும் ஒரு குழந்தையை கரு தரிக்க செய்வதற்கு தாக்கம் செலுத்தும் பல காரணிகள் உண்டு. ஒரு ஆண் கரு வளர்ச்சிக்கு அவருடைய விந்துகளின் கட்டமைப்பும் செயற்பாடும் எண்ணிக்கையில் சிறப்பான முறையில் அவை விந்து திரவத்தில் இருப்பது அத்தியவசியமாகும்.

 

இவற்றில் ஒரளவேனும் குறைபாடு ஏற்படும் போது ஓர் ஆண் மூலம் ஒரு பெண்ணை கருத்தரிக்க செய்யும் ஆற்றல் குறையும். இந்நிலைமை கருவள குறைவு என அடையாளப்படுத்தப்படும். இது மிக அபூர்வமாக கருவளமின்மை அல்லது மலட்டுத்தன்மை வரை வளர்ச்சி அடையக்கூடும். இந்த விடயங்கள் ஒரு பெண்ணின் கருவளம் மீதும் தாக்கம் செலுத்துகின்றது. தற்போது பாவனையிலுள்ள சகல விதமான குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளும் தடுப்பூசிகளும் பெண்ணின் பாவனைக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டது. இவற்றின் மூலம் தற்காலிகமாக கருத்தரிக்கும் ஆற்றல் தடுக்கப்படுகிறது.

 

ஓர் ஆணுக்காக தற்காலிகமாக மலட்டுத்தன்மை ஏற்படத் கூடிய குடும்ப கட்டுப்பாட்டு உரிய விழுங்கும் மாத்திரையொன்று உலகில் எவ்விடத்திலும் கிடையாது.

 

சில நோயாளிகளுக்கு நீண்ட காலம் பயன்படுத்தும் ஒளடதம் காரணமாக கருவளம் பாதிக்கக்கூடிய சாத்தியம் உண்டு. ஒடளதம் காரணமாக ஏற்படக் கூடிய கருவள பாதிப்பு மேற்படி ஒளடதத்தை நிறுத்தியதுடன் இயல்பு நிலைக்கு திருப்பும். மேற்படி ஒளடகத்தை பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட மேல் நாட்டு மருத்துவரின் மருந்துச்சீட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டியது அத்தியவசியமாகும்.

 

சுருக்கமாக கூறுவதாயின் குறித்துரைக்கப்பட்ட இனக்குழுமத்தின் அல்லது இனத்தின் மீது குறிப்பிட்ட கருவளத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒளடதங்கள் மேற்கத்தேய மருத்துவ விஞ்ஞானத்தில் கிடையாது. அவ்வாறு செய்தமைக்கான எந்தவித விஞ்ஞான ரீதியான சான்றாதாரமும் இல்லை என்பதை நாம் வலியுறுத்தி கூறுகின்றோம்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அமெரிக்கா – வடகொரியாவிற்கும் இடையிலான 02வது உச்சிமாநாடு பெப்ரவரி மாத இறுதியில்..

கண்டியில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் முத்திரையை வெளியிட்டார்-அமைச்சர் ஹலீம்

110 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது – மீட்பு பணி தீவிரம்