உள்நாடு

586 கொரோனா தொற்றாளர்களின் விபரம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 9791 எ அதிகரித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் 586 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 115 பேருக்கும், பேலியகொடை மீன் சந்தையுடன்; தொடர்புடைய 467 பேருக்கும், நாடு திரும்பிய கடலோடிகள் 4 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,142 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 5,630 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மகிந்த ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் – நபர் ஒருவர் கைது.

முட்டை இறக்குமதி தொடர்பான புதிய தகவல்

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு