கேளிக்கை

பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரபல பின்னணிப் பாடகர் உதித் நாராயணனின் மகன்

(UTV|INDIA)-பிரபல பின்னணிப் பாடகர் உதித் நாராயணனின் மகன் ஆதித்யா நாராயணன். இவர் சம்பவத்தன்று சொகுசு காரில் அந்தேரி புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் ஒரு ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ டிரைவரான ராஜ் குமார் பலேக்கர்(வயது64) மற்றும் பெண் பயணி சுரேகா சிவனேகர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அவர்களை மீட்ட ஆதித்யா நாராயணன், இருவரையும் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். இது குறித்து வெர்சோவா போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் எதிர்பாராமல் நடந்த இந்த விபத்திற்கு தான் மிகவும் மனம் வருந்துவதாக கூறிய ஆதித்யா நாராயணன், இது குறித்து பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம்

எனது பாவம் அவரை சும்மா விடாது

வெளியீட்டுக்குத் தயாராகும் ‘ராதே ஷ்யாம்’