சூடான செய்திகள் 1

பேஸ்புக் தடை தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்..

(UTV|COLOMBO)-பேஸ்புக் தடை தொடர்பில், அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் ஃபெர்ணாண்டோவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில், பேஸ்புக் நிறுவனத்தின் 3 பிரதிநிதிகளும், தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளும், கணினி அவசர செவிமடுப்பு மையத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர், பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்திக்கவுள்ளார்.

இதன்போது பேஸ்புக் சமுக வலைத்தளத்தில் குரோதம் மற்றும் இனவாத கருத்துக்கள் பகிரப்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.இதன்போது பேஸ்புக் சமுக வலைத்தளத்தில் குரோதம் மற்றும் இனவாத கருத்துக்கள் பகிரப்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமைக்கு, இலங்கை பேஸ்புக் சிங்கள மொழிப்பெயர்ப்பு குழுமம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

அந்த குழுமத்தின் தலைவர் ரஜீவ் யசிரு இதனைத் தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டு முதல் பேஸ்புக் சிங்கள மொழியிலும் இயங்கி வருகின்ற நிலையில், அதனை நடைமுறைப்படுத்தியது தமது குழுவே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கோட்டாவுக்கு ஆதரவு

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு பிற்போடப்பட்டது