சூடான செய்திகள் 1

முட்டை இறக்குமதி செய்யும் தேவையில்லை

(UTV|COLOMBO)-உள்நாட்டு நுகர்வுக்கு போதுமான அளவு முட்டைகள் சந்தையில் காணப்படுவதால் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லை என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிகால் வெடிசிங்க, கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பி. ஹெரிசனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லை என்பதால், அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அது தொடர்பில் இலங்கை துறைமுகம் மற்றும் சுங்கப் பிரிவிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு போதுமான அளவு முட்டைகள் இருப்பதால் எந்தவொரு இறக்குமதியாளர்களுக்கும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அமைச்சர் தனக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நிகால் வெடிசிங்க கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரபல பாடகி காலமானார்

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள் இன்று முதல்

ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்காதிருக்க தீர்மானம்