(UTV|BANGALADESH)- நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட கலிதா ஜியா, இந்த வழக்கில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை. ஐகோர்ட் நீதிபதி தலைமையில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டில் முறையீடு செய்திருந்தார். மேலும், தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, சிறப்பு கோர்ட்டில் நடைபெற்ற ஊழல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஐகோர்ட்டிடம் ஒப்படைக்கப்பட்டன. ஐகோர்ட் நீதிபதிகள் இனாயத்துர் ரஹ்மான், ஷாஹிதுல் கரீம் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று இந்த மனுவின் மீது விசாரணை நடைபெற்றது.
அப்போது, கலிதா ஜியா 4 மாத இடைக்கால ஜாமினில் விடுவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]