சூடான செய்திகள் 1

15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

(UTV|COLOMBO)-15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க இலங்கை ஆட்பதிவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமளவில் அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான குறைந்த மட்ட வயதெல்லை 16 இல் இருந்து 15 இற்கு குறைப்பதற்கான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதனால் இந்த விடயத்தை முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக தற்சமயம் விண்ணப்பிக்கலாம் என்றும் திணைக்களத்தின் இயக்க செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் தெரிவித்தார்.

மாணவர்கள் தமது விண்ணப்பங்களை உரிய பாடசாலை அதிபரின் ஊடாக அனுப்பி அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மலையக ரயில் போக்குவரத்து தாமதம்

பொலிஸ் மா அதிபர் உட்பட 43 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

கொரோனா வைரஸ் – இதுவரையில் 1011 பேர் உயிரிழப்பு